"வீரப்பன் புகழ்" பிரியாவைக் கொல்ல சதி?
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி, அவர் மூலம் வீரப்பன் குறித்த தகவல்களைப் பெற்று,அதிரடிப்படைக்கு உதவிய கோவையைச் சேர்ந்த பிரியாவின் வீட்டுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் வந்ததால் அவரதுகுடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை வட வள்ளி பகுதியில் பிரியா வசித்து வருகிறார். இவரது பாட்டி வீடு தாமஸ் வீதியில் உள்ளது. தனது வீட்டிலிருந்துஅடிக்கடி தாமஸ் வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு பிரியா வருவது வழக்கம்.
இதைத் தொடர்ந்து பிரியாவின் வீட்டுக்கு அவரது பாட்டி போன் செய்து தகவலைக் கூறினார். இதையடுத்து, பிரியாவும் அவரதுஉறவினர்களும் வடவள்ளியிலிருந்து தாமஸ் வீதியில் உள்ள வீட்டுக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல்அங்கிருந்து தப்பியோடி விட்டது.
மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்து சென்றது குறித்து பிரியா போலீஸில் புகார் கொடுத்தார். துணை ஆணையர் நாகராஜன் விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார். மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இருப்பினும் அவர்கள்சிக்கவில்லை.
அந்தக் கும்பல் எதற்காக பிரியாவின் வீட்டுக்கு வந்தது என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படைக்கு பிரியா உதவியிருப்பதால் அவரைத் தீர்த்துக் கட்ட வீரப்பன் ஆதரவாளர்கள்வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications