முருகன் கோவில்களில் இன்று வைகாசி விசாகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், வைகாசி விசாகத் திருநாள் இன்று விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் விசாக நட்சத்திரத் தினத்தன்று அவதரித்ததைத் தொடர்ந்து ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாகநட்சத்திர நாளன்று விசாகத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச் சோலை, சுவாமிமலைஉள்ளிட்ட தலங்களில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் முருகப் பெருமானை வழிபட்டுவருகின்றனர்.
தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள்விசேஷமாக கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications