ஜெ.வுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
பெண் மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும்அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் மனித வெடிகுண்டு ஜெயலலிதாவைத் தீர்த்துக் கட்ட அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகமத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புமேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இசட் பிரிவு கருப்புப் பூனைப் பாதுகாப்புப் படை வளையத்தின் கீழ் ஜெயலலிதா உள்ளார். தற்போது கூடுதலாகநியமிக்கப்பட்டுள்ள போலீஸாரையும் சேர்த்து 70 போலீஸார் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதேபோல, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளபோலீஸார், காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் ரிசர்வ் வங்கி வரை கண்காணிப்புப் பணியை மேற்கொள்வார்கள்.
வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணித்து வருவார்கள். சந்தேகத்திற்கு இடமானவர்களைதடுத்து நிறுத்தி விசாரிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கோட்டையில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டைக்குள் வரும் வாகனங்களைசோதனையிடுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருவோர் தீவிரசோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு காரணமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications