திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாது: கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று மக்கள் தமிழ் தேசம்கட்சியின் தலைவர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளால் திமுக கூட்டணியில் எந்த மாற்றமும்,பிளவும், பிரச்சினையும் ஏற்படாது. இந்தத் தேர்தல் அரசியல் செயல்பாடுகளை எடைபோடும் தேர்தலாக அமையவில்லை.

கொள்கை ரீதியிலான கூட்டணி திமுக கூட்டணி. எனவே அற்ப காரணங்களுக்காக கூட்டணி உடையாது. மக்கள் தமிழ் தேசம் கட்சிஇக்கூட்டணியில் நீடிக்கும், திமுக கூட்டணியில் இருந்துதான் சட்டசபை தேர்தலை நாங்கள் சந்திப்போம்.

எங்களது கட்சியின் வேலூர் மண்டல மாநாடு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவித்திருந்தோம். அதை தற்போது ஆகஸ்ட் மாதத்திற்குத்தள்ளி வைத்துள்ளோம்.

தமிழகத்தின் நீண்ட நாள் கனவான சேது சமுத்திரத் திட்டத்திற்கு அனுமதி வாங்கித் தந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதியைபாராட்டுகிறேன். அதேபோல, சுய மரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற திமுக தலைவரின்கோரிக்கையும் வரவேற்புக்குரியது தான் என்றார் கண்ணப்பன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+