பீகார் சட்டசபை கலைப்பு: கருணாநிதி, ராமதாஸ் வரவேற்பு
சென்னை:
பீகார் சட்டசபையைக் கலைத்தது நியாயமானது தான். இல்லாவிட்டால் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏக்களை விலைக்குவாங்கும் பாஜகவினரின் முயற்சி பலித்திருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர்கூறியுள்ளனர்.
பீகார் சட்டசபை கலைப்பு குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகாரில் ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைய வழிகாணப்பட்டுள்ளது. அங்கு ஆளுநர் மீது குறை கூற நியாயம் இல்லை. அவர் என்ன செய்தார்? ஆட்சி அமைந்து அமைச்சர்களுக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்தாரா?
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திகள், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கும் குதிரை வியாபாரத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க நடத்திய சூழ்ச்சி இந்தக் கலைப்பின் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது.
கட்சித் தாவல் தடைச் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோவில் என்ற வாசகம் பாஜகவுக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது. பாஜகவினர் வெளியில் பேசிவருவதற்கும், நடைமுறையில் செயல்படுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் தெரிகின்றன. இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இலலைஎன்பது மீண்டும் ஒரு முறைவெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பீகாரில் மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நின்று பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications