ராஜீவ் கொலை: நளினி, 4 பேர் எப்போது விடுதலை?
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன்,ராபர்ட் பெயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் மனு செய்துள்ளனர்.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டுக்குப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம்தூக்குத் தண்டனை விதித்தது.
மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றியது.தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகமாற்றுமாறு கோரி நளினி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இறுதியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியால் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகமாற்றப்பட்டது. தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சின்ன சாந்தன் ஆகியோர் கருணை மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்கள் குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட நான்கு பேரும் தங்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
நான்கு பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வழக்கறிஞரான வி.இளங்கோவன் கூறுகையில்,நான்கு பேரும் 14 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டனர். ஆயுள் தண்டனையின் படி, 14 ஆண்டுகளைக் கடந்த ஒருவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று விதி உள்ளது.
இவர்கள் நான்கு பேரும் விரைவில் விடுதலை ஆவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக நான்கு பேரும்சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வது குறித்து அரசுக்கு,ஆலோசனைக் குழு அறிக்கை தர வேண்டும்.
அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் தான் அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த ஆலோசனைக் குழுவில், மாவட்ட ஆட்சித்தலைவர், சிறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி ஆகியோர் இடம் பெறுவார்கள்.
நளினி உள்ளிட்டோரின் விடுதலை குறித்து சிறைக் கண்காணிப்பாளர் தனது ஆய்வை ஏற்கனவே தொடங்கி விட்டார்.அடுத்தமாதத்துடன் நளினி, பெயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 14 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்கின்றனர். ரவிச்சந்திரன் வருகிறடிசம்பர் மாதத்துடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார் என்றார் இளங்கோவன்.
இதற்கிடையே சிறைத்துறை கூடுதல் டிஜிபி போலோ நாத் கூறுகையில், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலம் முழுவதும்சிறையில் கழிக்க வேண்டும் என்பது தான். 14 ஆண்டுகளைக் கழித்த எவருமே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுஉரிமை கோர முடியாது.
இருப்பினும், ஆலோசனைக் குழு விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்தால் அதை அரசு ஏற்று விடுதலை செய்யலாம். இதில்அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
போலோநாத் இவ்வாறு கூறினாலும் கூட, நளினி உள்ளிட்டோர் விரைவில் விடுதலை ஆவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவேதொடங்கி விட்டதாகவே தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications