டி.ஆர்.பாலுவைப் புறக்கணித்த கலெக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைஅமைச்சர் டி.ஆர். பாலு அழைத்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பங்கேற்கவில்லை.

திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுப் பணிகள்உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டி.ஆர்.பாலுஅழைப்பு விடுத்திருந்தார். இதற்கான கூட்டம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய உள்ளாட்சித் துறை இணை அமைச்சர் ரகுபதியும் இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். ஆனால் ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்குப் பதில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்களும், கலெக்டர்களின்உதவியாளர்களும் வந்திருந்தனர்.

அவர்களுடன் பாலு ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஆட்சித் தவைர்கள்வந்தால் அவர்களோடு, வராவிட்டால் வந்தவர்களோடு, எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்ப்பை மீறி மத்திய அரசு செயல்படும்.

ஆட்சித் தலைவர்கள்தான் நேரில் வர வேண்டும் என்பதில்லை. கடை நிலை ஊழியர்களிடம் கூறி, தகவல் சரியான இடத்திற்குவந்து சேர்ந்தால் கூடப் போதுமானது என்றார் பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+