சிறந்த போலீஸ் "மீசைக்குப்" பரிசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறந்த மீசை வைத்துள்ள காவலர்கள், தொப்பையில்லாத காவலர்கள், சிறந்தசேவைபுரிந்த காவலர்களுக்குசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கிப்பாராட்டினார்.

மொத்தம் 150 போலீஸாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மீசைப் பராமரிப்பில் சிறந்து விளங்கியதற்காகஇன்ஸ்பெக்டர் மோகன், சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ், தலைமைக் காவலர்கள் தங்கவேலு, ராஜேந்திரன்,மாணிக்கம் ஆகியோருக்கும், தொப்பையில்லாமல், கச்சிதமான உடல் கட்டமைப்புடன் விளங்கியதற்காகஇன்ஸ்பெக்டர் தேவராஜ், தலைமைக் காவலர் செங்குட்டுவன், காவலர் முத்துக்குமரன் ஆகியோருக்கு விருதுகள்வழங்கப்பட்டன.

சிறந்த உயர் அதிகாரிகளுக்கான பரிசு உதவி ஆணையர்கள் கலியமூர்த்தி, ராஜகோபாலன், சேகர் ஆகியோரும்,இன்ஸ்பெக்டர்களுக்கான பரிசுகளை கோபாலகிருஷ்ணன், மங்கையர்க்கரசி, ஜெயக்குமார் ஆகியோர் உள்ளிட்டஅதிகாரிகள் பெற்றனர்.

சிறந்த காவல் நிலையமாக அண்ணா நகர் காவல் நிலையமும், குற்றத் தடுப்பில்சிறப்பாக செயல்பட்டமைக்காகவிருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நடராஜ் பேசுகையில், போலீஸாரின் தொப்பை குறித்து எல்லோரும் கேலி பேசுகிறார்கள்.பத்திரிக்கைகளில் கேலிச்சித்திரங்களும் வரையப்படுகின்றன. சரியாக சாப்பிடாமல் இருப்பது, உடலை சரியாகப்பராமரிக்காமல் இருப்பது இதனால்தான் தொப்பை ஏற்படுகிறது.

நல்ல உடல் கட்டு, மிடுக்கான தோற்றம், இவற்றைத்தான் காவலர்களிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.போலீஸாருக்கு மிடுக்கைக் கொடுப்பது மீசைதான். அதனால்தான் மீசைக்கு முதல் மரியாதை கொடுத்து பரிசுவழங்குகிறோம்.

பொதுமக்களிடம் போலீஸார் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், இன்முகத்துடன் அவர்களுடன் பேசிபிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார் நடராஜ்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடராஜ் பேசுகையில், நடிகை அனாமிகாவும், ஜாகுவார் தங்கமும் தனித்தனியாகபுகார் கொடுத்துள்ளனர். இரு தரப்பு புகார்களையும் நியாயமான முறையில் அணுகி விசாரணை நடத்தி உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நடராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+