மாநில சுயாட்சி: திமுக மீண்டும் கோரிக்கை
கோவை:
முழுமையான மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று கோவை திமுக மண்டல மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
கோவையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக மண்டல மாநாட்டின் ஒரு பகுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மற்ற தீர்மானங்கள்: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை விரைவாக வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவது காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் ஆபத்தையே விளைவிக்கும். காவிரிநடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் நிலவுவதால், தமிழக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 205 டிஎம்சி நீரை கர்நாடகம் விடுவிக்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
நதிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கை மற்றும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தவிர்க்கப்படும். முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்கலாம்.
கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அரசு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் தனியார் துறைகளில் இந்த இட ஒதுக்கீட்டை முதலில்தொடங்க வேண்டும்.
நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில், தேர்தல் விதிகளை மீறி தொகுதிகளிலேயே தங்கியிருந்து பல்வேறுமுறைகேடுகளில் ஈடுபட்ட மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில்களை மத்திய அரசு விட வண்டும்என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications