வங்தேசத்திலிருந்து விடுதலையான மீனவர்கள் நாளை சென்னை வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கதேச சிறைவாசத்திலிருந்து மீண்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் திங்கள்கிழமை தமிழகம் திரும்புகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீன் பிடிக்க சென்றபோது வழி தவறி வங்கதேசகடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து அவர்களை வங்கதேச கடற்படையினர் கைது செய்து சிறையில்ஆஜர்படுத்தினர்.

அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசம் முடிந்த நிலையில் அவர்கள் விடுதலைசெய்யப்படாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட 6 சென்னை மீனவர்களையும், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர், தெற்குதிரிபுராவில் உள்ள இந்திய எல்லையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் 6 மீனவர்களையும் சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளனர். கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படும் மீனவர்கள் அங்கிருந்து ரயில் மூலம்நாளை சென்னை திரும்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+