சந்திரிகா அடுத்த வாரம் டெல்லி வருகிறார்
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
அதிபர் சந்திரிகா இந்தியா வருவதாக இருந்து இரண்டு முறை அந்தப் பயணம் தள்ளிப் போடப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த வாரம் சந்திரிகா இந்தியா வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற வியாழக்கிழமை சந்திரிகாடெல்லி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஉள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திககிறார்.
இதற்கிடையே சுனாமி நிவாரண நிதியை, விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தில் உள்ள, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும்பகிர்ந்தளிக்க சந்திரிகா ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கிளிண்டன், சந்திரிகாவிடம் கோரிக்கை விடுத்ததை ஏற்று இந்தமுடிவை சந்திரிகா எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சந்திரிகாவின் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பில், விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தில் உள்ளபகுதிகளிலும் சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா உறுதியாக உள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, சுனாமி நிவாரணப் பணிகள் முட்டுக் கட்டையாக அமைந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்தமுடிவை சந்திரிகா எடுத்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் சுனாமிநிதியை செலவிடுவதிலும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் இலங்கை அரசு பாரபட்சம் காட்டுவதாக எழுந்து புகார்மற்றும் ஐ.நா சபை, கிளிண்டன் ஆகியோர் கொடுத்த நெருக்கடிகளாலும்தான் இந்த முடிவுக்கு சந்திரிகா வந்துள்ளதாக தெரிகிறது.
சந்திரிகாவின் தற்போதைய முடிவுக்கு, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்டசில ஆளும் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. புலிகளுடன் எந்தவித உடன்படிக்கையிலும் சந்திரிகா ஈடுபடக் கூடாது என்று அவை கோரியுள்ளன.இருப்பினும் சர்வதேச நெருக்கடி காரணமாக புலிகளுடன் இணைந்து செயல்பட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சந்திரிகாஉள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications