புதுக் கட்சி: விஜயகாந்த் இன்று அறிவிப்பு
சென்னை:
நடிகர் விஜயகாந்த் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்.
ரஜினிகாந்த்தைப் போலவே அரசியல் ஆசையுடன் வலம் வந்த நடிகர் விஜயகாந்த் சமீப காலமாகவே, குறிப்பாக ரஜினிகாந்த்தின்அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு மங்கத் தொடங்கியதற்குப் பிறகு, நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என பேசத்தொடங்கினார்.
இதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மூன்றம் பல்வேறு சமூகப் பணிகளை முடுக்கி விட்டார். செப்டம்பர் மாதம் தனது அரசியல்கட்சி குறித்த அறிவிப்பு மதுரையில் வெளியிடப்படும் என சில மாதங்களாக கூறி வந்தார் விஜயகாந்த்.
இந்த நிலையில் திடீரென ஜூன் 1ம் தேதி தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட விஜயகாந்த் முடிவெடுத்தார்.இதையடுத்து விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் புதிய பரவசம் ஏற்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்துஏராளமான ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். அனைவரும் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கோயம்பேடு, ஆண்டாள் அழகர்திருமணத்தில் (இதுதான் கட்சி அலுவலகமாக மாற்றப்படவுள்ளது) குவிந்திருக்கிறார்கள்.
இன்று காலை தனது அரசியல் பிரவேசத்தை விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்று காலைமுதல் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், ரசிகர் மன்றத் தலைவர் ராமு வசந்தன் மற்றும் ரசிகர் மன்ற முக்கியப்பிரமுகர்களுடன் விஜயகாந்த் இறுதிக் கட்ட ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கட்சியின் பெயராக மக்கள் முன்னேற்றக் கழகம் அல்லது தமிழர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் ஒன்று வைக்கப்படலாம்என்று கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர் மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் மாற்ற விஜயகாந்த்முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக் கொடியின் நிறம் கருப்பு, சிவப்பாகவும், நடுவில் மஞ்சள் நிறத்தில் ஒலிம்பிக்ஜோதியும் இடம் பெறும்.
இன்னும் சற்று நேரத்தில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களையும், ரசிகர்களையும் சந்திக்கவுள்ளார்விஜயகாந்த். அப்போது புதிய கட்சி குறித்த அறிவிப்பையும், மதுரை மாநாட்டுத் தேதியையும் விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.
விஜயகாந்த்தின் புதிய கட்சியின் பிரவேசத்தை அறிவதற்காக செய்தியாளர்கள் ஏராளமான அளவில் கல்யாண மண்டபத்தில்குழுமியுள்ளனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு தீவிர அரசியலில் குதிக்கப் போகும் முக்கிய நடிகர்விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications