பள்ளிகளுக்கு அனுமதி: அரசு விதிக்கும் 40 நிபந்தனைகள்!
சென்னை:
40 விதமான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரே வாரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என்று தமிழக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அரசு அங்கீகாரம் பெறாத 2000 நர்சரி, தொடக்கப் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள், அங்கீகாரம் பெற விரும்பினால் 40 விதமான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனுப்பப்படும் விண்ணப்பங்களுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ததற்கான ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும். அவை:
விண்ணப்ப கடிதம், இணைப்புகள் பட்டியலுடன், ரூ. 1500க்கான பதிவுக் கட்டணத்திற்கான அசல் வங்கிச் சலான், 3 ஆண்டுகளுக்கான பள்ளிக் கணக்குகள் விவரம், 3 ஆண்டுகளுக்கான ஒப்புதல் கட்டணத்திற்கான அசல் சலான், 100 மாணவர் வரையிலான பள்ளி என்றால் ரூ. 1500, 101 முதல் 250 வரைக்கும் ரூ. 3750, 251 முதல் 500 வரைக்கும் ரூ. 7500, 500க்கு மேல் என்றால் ரூ. 7500 மற்றும் ஒரு மாணவருக்கு ரூ. 15 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு வைப்புத் தொகை (பள்ளியின் பெயரில்), பள்ளி அறக்கட்டளை அல்லது சொசைட்டி குறித்த விவரம், பள்ளிக் கட்டடம் சொந்தம் என்றால் பத்திரத நகல், வாடகை அல்லது குத்தகை என்றால் அதற்கான ஒப்பந்த நகல், வரையறுக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து கட்டட உறுதிச் சான்றிதழ்.
சுகாதாரச் சான்றிதழ், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் தடையில்லா சான்று, கட்டட உரிமச் சான்று, பள்ளியின் வரைபடம், பள்ளி யார் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது, ஒரே நிர்வாகியின் கீழ் இயங்குகிறதா என்ற விவரம், மாநகராட்சிப் பகுதியில் இருந்தால் அதுதொடர்பான அத்தாட்சி, சொந்தக் கட்டடம் என்றால் மாநகராட்சியின் ஒப்புதல் பெற்ற வரை படம், பள்ளிக் கட்டடத்தின் புகைப்படம், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தின் உள் கட்டமைப்பு சார்ந்த புகைப்படங்கள், இருபக்கமும் அகலமாக மாடிப் படிகள் இருக்கிறதா என்ற விவரம், பள்ளி வளாகத்தில் ஓலை போன்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள் இல்லை என்பதற்கான நிர்வாகியின் உறுதிமொழி.,
விளையாட்டு மைதானம் சொந்தமா, வாடகையா, அது பள்ளி வளாகத்திலேயே உள்ளதா, அருகில் உள்ளதா என்பதற்கான விவரம், பள்ளி வளாகத்திற்குள் சமையல் கூடம் போன்ற வேறு கட்டடம் உள்ளதா என்பதற்கான அத்தாட்சி, மாணவர்களுக்கு பள்ளி வளாகம் முழுமையான பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான உறுதிமொழி, எல்.கே.ஜி, யு.கே.ஜி பிள்ளைகளுக்கான வகுப்பறைகள் தரைத் தளத்தில்தான் இயங்குகிறது என்பதற்கான சான்று, பள்ளிக்கு அருகில் மதுக் கடை, ஹோட்டல் போன்றவை உள்ளதா என்ற விவரம்.
கழிப்பிடம், குடிநீர் வசதி, வகுப்பு வாரியான கட்டண விவரம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதிய விவரங்கள், ஆசிரியர் ஒப்பந்த பத்திரம், பள்ளியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள், கல்விச் சாதனம், விளையாட்டுக் கருவிகள் குறித்த விவரம், நூலக விவரம், தமிழ் முதன் மொழியாக கற்பிக்கப்படுவதற்கான உறுதிமொழி, அரசிடமிருந்து நிதியுதவி கோர மாட்டோம் என்பதற்கான உறுதி மொழி உள்ளிட்டவை இந்த நிபந்தனைகளில் அடங்கியுள்ளன.
இவை அனைத்தும் சரியாக இருந்து விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications