தனுஜாவிடம் ஏமாந்த தயாரிப்பாளர் வழக்கு!
சென்னை:
நடிகை தனுஜாவுக்கு அவ்வப்போது சுமார் ரூ. 10லட்சம் வரை கொடுத்து, ஏமாந்த தயாரிப்பாளர் ஒருவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர்களுக்கும், நடிகைகளுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம் போலும். வரிசையாக பல நடிகைகள் செக் மோசடி, பணம் வாங்கி விட்டு ஏமாற்றியது எனவழக்குகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் நடிகை அனாமிகா மீது ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக போலீஸில் புகார் செய்தார்.பதிலுக்கு, ஜாகுவார் தன்னை அடைய நினைத்ததாக அனாமிகா பதில் புகார் கொடுத்தார்.
இந்த சந்தடி ஓய்ந்துள்ள நிலையில், தற்போது நடிகை தனுஜா ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் குல்தஜா என்பவர் சென்னை எழும்பூர் கூடுதல்தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது புகார் விவரம்: நான் ஒரு சினிமா தயாரிப்பாளர். கடந்த 10 வருடங்களாக படம்தயாரித்து வருகிறேன். ரத்னா, முள்ளில் ரோஜா ஆகிய இரு படங்களைஇதுவரை தயாரித்துள்ளேன். கடந்த 2004ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பாபு கணேஷ் மூலமாக நடிகை தனுஜா எனக்கு அறிமுகமானார்.
தன்னை மிஸ் மெட்ராஸ் என்றும், சட்டக் கல்லூரி மாணவி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். டேய் என்ற படத்தில் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறிக்கொண்டார். எனக்கு டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸைத் தெரியும், அவர் மூலம் நடிகர் விஜய்யைத் தெரியும் என்று கூறினார்.
பின்னர் செல்போன் வாங்க வண்டும் என்று கூறினார். இதனால் 24,000 ரூபாய்க்கு செல்போன் வாங்கிக் கொடுத்தேன். விஜய் கால்ஷீட் வாங்கித் தருவதாககூறியிருந்தார். அது குறித்து கேட்டபோது, பெங்களூரில் விஜய் இருப்பதாகவும், அங்கு போய் சந்திக்கலாம் எனவும் கூறி என்னை பெங்களூருக்கு அழைத்துப் போனார்.
அங்கு அனைத்து செலவுகளையும் நான்தான் செய்தேன். நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். அப்போது என்னை தனது வலையில் வீழ்த்தி தனக்கும், தனதுஅம்மாவுக்குமாக ரூ. 25,000க்கு துணிகள் எடுத்துக் கொண்டார். ஆனால் விஜய்யை கண்ணில் கூட காட்டவில்லை.
அதன் பின்னர் அந்த செலவு, இந்த செலவு என்று கூறி 50,000 ரூபாய் வரை வாங்கினார். பிறகு உடம்பு சரியில்லை என்று கூறியும்,ஜிம்முக்கு பணம் கட்ட வேண்டும்என்று கூறியும் 26,000ரூபாய் பெற்றார். பிறகு விஜய்யின் கால்ஷீட் வேண்டுமானால் ரூ. 5 லட்சம் முன்பணமாக கொடுக்க வேண்டும் என்றார். அதையும் கொடுத்தேன்.
பிறகு கார் வாங்க வேண்டும் என்றார். அதற்கும் ரூ. 4 லட்சம் கொடுத்தேன். இத்தனையும் கொடுத்தும் விஜய்யின் கால்ஷீட்டை அவர் வாங்கித் தரவேயில்லை.அப்போதுதான் இவரது மோசடிகளை புரிந்து கொண்டேன்.
இதுவரை கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, தனுஜாவும், அவரது தாயாரும் சேர்ந்து எங்களுக்கு அமைச்சரைத் தெரியும், ஒழித்து விடுவோம் என்றுகூறி மிரட்டினர்.
என்னைப் போல பலரையும் தனுஜா ஏமாற்றியுள்ளார். இப்போது 2 வீடு, 3 கார், வங்கியில் ரூ. 80 லட்சத்திற்கு பணம் என சொகுசாக வாழ்ந்து வருகிறார். என்னைஏமாற்றி அவர் பெற்ற பணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications