முன்னாள் திமுக எம்எல்ஏ திடீர் மாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைக்கு பென்ஷன் பணம் வாங்க வந்த கண்டமங்கலம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராமன் திடீரென மாயமானார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமன் (வயது 78). இவர் 1968 முதல் 1978 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் இத் தொகுதியின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் குடும்பத்துடன் கண்டமங்கலத்தில் வசித்து வருகிறார்.

ராமன் மாதந்தோறும் பென்ஷன் பணம் வாங்குவதற்காக சென்னை வருவது வழக்கம். இதே போல கடந்த மாதம் 12ம் தேதி பென்ஷன் பணம் வாங்குவதற்காக ராமன் சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார். அவர் சென்னையில் உள்ள பழைய எம்எல்ஏ விடுதியில் 70ம் எண் அறையில் தங்கியுள்ளார்.

அவர் சில நாட்கள் சென்னையிலேயே தங்கியிருக்கு முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. தினமும் வீட்டுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்த ராமன் கடந்த 21ம் தேதிக்குப் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து அவரது மகன் நெடுஞ்செழியன் சென்னை வந்து தனது தந்தை ராமனை தேடியுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர், அரசினர் தோட்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+