சமஸ்கிருதத்தில் பேசு... முற்றுகையிடப்பட்ட ஜெயகாந்தன்
கோவை:
![]() |
சர்ச்சைப் புகழ் மாஜி எழுத்தாளரான ஜெயகாந்தன் கோவையில் நடந்த பாராட்டு விழாவில் தமிழில் பேசியபோது, அவரைத்தடுத்த தமிழ் ஆர்வலர்கள் சமஸ்கிருதத்தில் பேசுமாறு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் சமஸ்கிருத சபா ஒன்றில் பேசிய ஜெயகாந்தன், தமிழை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள்நாய்கள் என்ற ரீதியில் பேசினார். அக் கூட்டத்தில் சமஸ்கிருதத்தை மிக உயர்வாகப் புகழ்ந்து பேசினார்.
இந் நிலையில் நேற்று கோவை காந்திபுரத்தில் ஞான பீட விருது பெற்றதற்காக ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா நடந்தது.காந்திபுரத்தில் ஒரு ஹோட்டலில் இந்த விழா நடந்து கொண்டிருந்தபோது, பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டக் கல்லூரிமாணவர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கூட்டமாக உள்ளே புகுந்தனர்.
தமிழை விட சமஸ்கிருதமே உயர்ந்தது என புலாகாங்கிதப்பட்ட ஜெயகாந்தன் ஏன் தமிழில் பேசுகிறார். அவர் சமஸ்கிருதத்தில்தான் பேச வேண்டும். தமிழில் பேச அவருக்கு அருகதை இல்லை என கோஷமிட்டனர்.
மேலும் ஜெயகாந்தனின் முந்தைய நாய்ப் பேச்சு குறித்த பிரசுரங்களையும் கூட்டத்தில் வினியோகித்தனர். இதை சிலர் தடுக்கமுயன்றபோது கூட்டத்தில் அடிதடி ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். போலீசாரும் விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய ஜெயகாந்தன்,
எனக்கு தமிழ் தான் தெரியும். வேறு மொழி தெரியாது. தொட்டிலில் குழந்தையாக தவழ்ந்தபோதே எனக்குத் தமிழ் தெரிந்தது.எனது தாய் தமிழில் தாலாட்டியதால் தமிழ் அறிந்தேன். இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று கூறிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்நான்.
இந்தி, ஆங்கிலமும் நாம் படிக்க வேண்டும். அப்போது தான் அகண்ட பாரத்தில் தமிழின் பெருமையை நாம் உணர்த்த முடியும்.
அரசியலுக்காக இந்தி, சமஸ்கிருதம் படிக்காதே என்று எதிர்த்துவிட்டு பின்னர் பதவிக்காக மண்டியிடுபவன் அல்ல நான்.இமயத்தின் உச்சியில் நின்று தமிழின் புகழை கொக்கரிப்பவன்.
பாரதி, அண்ணா போன்ற தமிழ் அறிஞர்களையே எதிர்த்தவர்கள் தமிழர்கள். அதுபோல என்னையும் எதிர்க்கிறார்கள். தமிழனுக்குஎன்று தனிக் குணம் உண்டு என்று பாடி வைத்துள்ளார் பட்டுக்கோட்டையார்.
நான் கூறிய கருத்து மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் எனது கருத்தில் எந்தமாற்றமும் கிடையாது என்றார்.



Click it and Unblock the Notifications
