சனிப் பெயர்ச்சியால் திமுக கூட்டணி உடையும்: டி.ஆர். சொல்றாருங்கோ!
தூத்துக்குடி:
வரும் ஜூன் 26ம் தேதி நடக்கவுள்ள சனிப் பெயர்ச்சிக்குப்பின் திமுக கூட்டணி உடையும் என லட்சிய திமுக தலைவரும்இயக்குனரும் நடிகருமான விஜய டி.ராஜேந்தர் ஜோசியம் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இடைத் தேர்தல் முடிவு சட்டசபை தேர்தல் முடிவுக்கு அச்சாரமாக இருக்கும் என்று சொன்ன கருணாநிதி, இடைத் தேர்தலில் அதிமுகஜெயித்து விட்டதால் சட்டசபை தேர்தலிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என்பதை ஒப்புக் கொள்வாரா?.
அரசியல் என்பது கடல் மாதிரி. ரிக்ஷாக்காரர் கூட அரசியலுக்கு வரலாம். அதுபோலத்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதுஒன்றும் ஆச்சரியம் இல்லை.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி அமைப்பார்கள் என்பது குறித்து இப்போதே கணிக்க முடியாது.
ஜூன் 26ம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்கிறது. அப்போது சனி மட்டும் இடம் பெயராது. கட்சிகளும் இடம் பெயரும், இடம்விட்டுஇடம் தாவக்கூடும். திமுக, கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டு கூட்டணியே உடையவும் வாய்ப்புள்ளது என்றார் விஜய டி.ராஜேந்தர்.
ஆ.. ரன்டக்குடக்கா.. ரன்டக்கு..!!












Click it and Unblock the Notifications