கத்தி பாய்ந்து நடிகர் விஷால் காயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மீரா ஜாஸ்மீனுடபடப்பிடிப்பின் போது கத்தி பாய்ந்ததால், நடிகர் விஷால் காயமடைந்தார்.

சண்டைக் கோழி என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை கிண்டி கேம்பகோலா மைதானத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில்செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின்நடிக்கிறார்.

ஆனந்தம், ரன், ஜி ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஜீவாவின் ஒளிப்பதிவில் கிண்டி கேம்பகோலா மைதானத்தில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. சண்டைக்காட்சி ஒன்றை சமீபத்தில் படமாக்கினர். அப்போது வில்லனாக நடித்த லால் என்பவர் வீசிய கத்தி தவறுதலாக விஷாலின்நெற்றியில் பட்டது. இதனால் ரத்தம் வெளிவர மயங்கி விழுந்தார் விஷால்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விஷாலுக்கு அறுவைச் சிகிச்சை செய்து 8 தையல்போட்டனர். 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி விஷாலுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்புஉடனடியாக நிறுத்தப்பட்டது.

சென்னையில் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் எடுக்க பறக்க இருந்தார்கள். அதற்குள் இந்த விபத்து.இதனால் சூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறதாம்.

மீரா ஜாஸ்மீனுக்கு இந்தப் படம் தவிர அவருக்கு மிக வேண்டியவரான லோகிததாஸ் இயக்கும் கஸ்தூரி மான், சேரன் இயக்கும்பொக்கிஷம் ஆகிய படங்கள் கையிருப்பில் உள்ளன.

கஸ்தூரிமான் படத்துக்கு நிதியுதவியே மீரா தான் என்கிறார்கள். மீராவுக்கு ஜோடியாக பிரசன்னா நடிக்கிறார்.

பொள்ளாச்சி கேரளா பக்கமாக சூட்டிங் படு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.

இந்தப் படத்தின் சூட்டிங்குக்காக சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தனர் மீராவும் லோகிததாசும்.குடிக்குப் பேர் போனவர் லோகிததாஸ். எனவே, இந்த இருவரும் தங்கியிருந்த ரூமில் இருந்து எப்போதும் மப்பும், மந்தாரமானசூழல் தானாம்.

மொத்தமாக 3 ரூம்களை இருவரும் புக் செய்திருந்தாலும் பெரும்பாலும் லோகிததாசின் அறையில் தான் மீராவும்தங்கியிருக்கிறாராம். காலை முதலே குவார்டர் பாட்டில்கள் வருகை ஆரம்பமாகிவிட்டதாம். சாப்பாட்டைவிட இந்த அயிட்டங்கள்தான் அதிகமாக இவர்களது அறைக்குப் போனதாக சொல்கிறார்கள்.

இது தவிர இன்னொரு விஷயம். சண்டைகோழி படத்தில் தன்னை கிளாமராகக் காட்டுமாறு தானாகவே முன் வந்துஇயக்குனரிடமும் ஒளிப்பதிவாளரிடமும் கோரிக்கை வைத்துள்ளார் மீரா ஜாஸ்மீன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+