பிளஸ் டூ மார்க் அடிப்படையில் கல்லூரிகளில் சேருவது எப்படி?
சென்னை:
தொழில் கல்லூரிகளில் சேர கடந்த 21 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிளஸ் டூ மதிப்பெண்கள்அடிப்படையில் புதிய ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பி.இ. மற்றும் எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர 1984ம் ஆண்டு தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்துஇந்த நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
எனவே பொறியில் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும்,மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.
அதாவது, பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள ஒரு மாணவர், கணிதத்தில் 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அது 100க்கு மாற்றப்பட்டு 100க்கு 100 மதிப்பெண்பெற்றதாக கருதப்படும். அதே மாணவர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் நான்கால் வகுக்கப்பட்டு, இந்தப் பாடங்களில்100க்கு எவ்வளவு வாங்கியுள்ளார் என்று கணக்கிடப்படும்.
இதன் பிறகு இந்த 3 பாடங்களிலும் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியுள்ளார் எனக் கணக்கிடப்பட்டு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.
அதாவது மொத்த மதிப்பெண் 200ஐ அடிப்படையாகக் கொண்டு தான் ஒரு மாணவரின் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.
மருத்துவ படிப்பில் சேர...
மருத்துவப் படிப்புக்கு கணிதப் பாடம் தவிர மேற்கூறிய முறையில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை அடிப்படையாகக் கொண்டு ரேங்க்பட்டியல் தயாரிக்கப்படும்.
நுழைவுத் தேர்வு முறை வருவதற்கு முன் இதே முறையின்படி தான் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
எம்பிபிஎஸ் சீட்களை அதிகரிக்க திட்டம்:
இதற்கிடையே எம்பிபிஎஸ் மற்றும் சட்டம் உட்பட சில தொழிற்படிப்புகளுக்கான சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற் கல்விக்கான மொத்த இடங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. பல என்ஜினியரிங் கல்லூரிகளில்இடங்கள் காலியாகவே உள்ளன.
அதே சமயம், மருத்துவம், சட்டம் போன்ற சில தொழிற் படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் தற்போதுஏற்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசு எடுக்கும் என்று கூறியுள்ளார். இதனால் மருத்துவ சீட்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்தும் என்று தெரிகிறது.
பி.எல். நுழைவுத் தேர்வு ரத்து:
இதற்கிடையே பி.எல்.படிப்புக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான நுழைவுத் தேர்வு வருகிற 25ம் தேதியும், 5 ஆண்டுபடிப்புக்கான நுழைவுத் தேர்வு 26ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பி.எல்.ஹானர்ஸ் (5 ஆண்டு) படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகளுக்கும் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications