போலி வாக்காளர்கள்: தடுக்கும் தேர்தல் கமிஷன் மீது அதிமுக பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தில் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுகவினரின் செயல்களைத் தடுக்க தேர்தல் கமிஷன் இரு தேர்தல் பார்வையாளர்களை அனுப்பியதைஅதிமுக மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் வரை போலி வாக்காளர்களை அதிகாரிகள் துணையுடன் மடமடவென அதிமுகவினர் சேர்த்து முடித்திருப்பதாக திமுக உள்ளிட்டஎதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்தன.
இதையடுத்து விழுப்புரம் தேர்தல் அதிகாரி மீது எப்ஐஆர் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதே போல மேலும் பல அதிகாரிகளும் அதிமுகநிர்வாகிகளும் சிக்கும் வாய்ப்புள்ளது.
இந் நிலையில் அதிகாரிகளே போலி வாக்காளர் சேர்ப்பில் அதிமுகவுக்கு உடந்தையாக இருப்பது குறித்து மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை (மாநில அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்) கூப்பிட்டு ஆளுநர் பர்னாலாவும் விசாரணை நடத்தியுள்ளர்.
இதற்கிடையே தமிழகத்தில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அறிக்கையை பரிசீலித்த தலைமைதேர்தல் ஆணையர் டாண்டன் தலைமையிலான குழு,
போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இன்று உத்தரவிட்டது. மேலும் புதிய வாக்காளர் சேர்க்கை மனுக்களை தனித்தனியே பரிசீலிக்கவும்உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிமுகவினரால் மொத்தமாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் சரியானவைதானா என தனித்தனியாக ஆணையம் ஆய்வு செய்யவுள்ளது.
இந் நிலையில், மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களுக்கு அதிமுகவின் சார்பில் இன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல்பணிக்குழுச் செயலாளரும் அமைச்சருமான ஓ.பி. அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில்,
எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் நடந்து கொண்ட விதம், அதிமுகவுக்கு எதிரான நேரடியான நடவடிக்கையாக உள்ளது. எதிர்க் கட்சிகள்தந்த புகாரை எங்களிடம் தந்து அது குறித்து எங்களது கருத்தை தேர்தல் ஆணையம் கேட்டிருக்கலாம்.
அதை தேர்தல் ஆணையம் செய்யாததால், இயற்கை நியதி மீறப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுகிறது.
இந்த விஷயத்தில் மத்தியில் உள்ள சில தமிழக அமைச்சர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.
மொத்தமாக வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முன், அவர்கள் விதிமுறைப்படி செயல்பட்டுள்ளார்களா என்பதை தேர்தல் கமிஷன்பார்க்க வேண்டும். அதைச் செய்யாமல் நடவடிக்கை மட்டும் எடுத்தால், அது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு துரதிஷ்டவசமான செயலாக அமைந்துவிடும் என்றுகூறியுள்ளார் ஓ.பி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications