சுயமரியாதை திருமணம்: மத்திய அரசு விரைவில் சட்டம்- கருணாநிதி
சென்னை:
சுயமரியாதைத் திருமணங்களுக்கு தேசிய அளவிலும் விரைவில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உறுதிமொழியை பிரதமர் மன்மோகன் சிங்அளித்துள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் திமுக தொண்டர் ஒருவரது இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:
ஆண்டுதோறும் இதுபோல நூற்றுக்கணக்கான திருமணங்களை என் வீட்டு வாசலிலேயே நடத்தி வைக்கிறேன்.
எமர்ஜென்சி காலத்தில் பலர் சிறையில் இருந்தனர். என்னை மட்டும் கைது செய்யாமல் விட்டிருந்தனர். அப்போது கூட வெளியூரில் இருந்து கழகத் தோழர்கள்மொட்டை போட திருப்பதி போகிறோம், வட பழனி போகிறோம் என்று போலீசாரிடம் பொய் சொல்லிவிட்டு என்னிடம் வந்து சீர்திருத்த முறைப்படி திருமணம்செய்தவர்களும் உண்டு.
இந்த இயக்கம் பல கஷ்-நஷ்டங்கள், சோதனை-வேதனைகளையும் தாண்டி இன்றும் உயிரோடு இருப்பதற்கு அத்தகைய சுயமரியாதை உணர்வு கொண்ட வாலிபர்கள்தான் காரணம்.
அண்ணாவை நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியதால் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டமயமாக்கப்பட்டன. இந்தத் திருமண முறை தமிழகத்தில் மட்டுமல்ல தேசியஅளவிலும் விரைவில் சட்டமாகப் போகிறது.
அதற்கான உறுதிமொழியை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடமும் நான் பெற்றிருக்கிறேன்.
ஒரு காலத்தில் தமிழகத்தின் குக்கிராமத்தில் கூட அனுமதிக்கப்படாத இந்தத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி சட்டப் பாதுகாப்புப் பெற இருப்பது என்வாழ்நாளில் பெற்ற பெரும் வெற்றியாக நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications