சென்னையில் அனல் காற்று: கடும் வெயிலுக்கு 3 பேர் பலி
சென்னை:
வெயில் கொடுமை தாங்காமல் சென்னையில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந் நிலையில் இன்றும் சென்னையில் தாங்க முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.இன்று 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தில் சென்னை, வேலூர் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் கொடுமையால் பகல் நேரங்களில்வெளியில் நடமாடவே மக்கள் அஞ்சுகின்றனர்.
ஜார்ஜ் டவுன் மலைய பெருமாள் கோவில் தெருவில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரும், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஒருவரும்வெயில் தாங்காமல் இறந்தனர்.
இவர்கள் பெயர், விவரம் தெரியவில்லை. 3 பேரின் சடலங்களும் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்றும் சென்னையை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள்தெரிவித்தனர். வழக்கமாக கோடை காலத்தில் பகல் 11 மணிக்கெல்லாம் கடற்காற்று வீசத் தொடங்கி விடும். இதனால் தரைக்காற்றின் வெப்பம் தணிந்து நிலப்பகுதிகுளிர்ச்சி அடைந்து விடும்.
ஆனால் தற்போது மாலை 4 மணிக்குப் பிறகு தான் கடற் காற்று வீசத் தொடங்குகிறது.மேற்கு பக்கத்திலிருந்து தரைக்காற்று பலமாக வீசுவதால் கடற்காற்றைநிலப்பரப்புக்குள் வரவிடாமல் தடுத்து விடுகிறது. இதனால் தான் நிலப்பரப்பில் வெப்பம் அதிகரிக்கிறது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications