சொத்துக் குவிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும் ஜெ
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை சேர்த்து நடத்துவதுதொடர்பான தீர்ப்பை வரும் 22ம் தேதிக்கு அறிவிப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே இன்று தெரிவித்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 4ம் தேதி விசாரணை நடைபெற்றது.
அப்போது சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் தனித்தனியாக நடத்துவதா, அல்லது சேர்த்துநடத்துவதா என்ற மனு மீதான இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
வழக்குகளை சேர்த்தே நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்கள் வாதம்செய்தனர். ஆனால் வழக்குகளை சேர்த்து நடத்த அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தார். இதன்படி இன்றுவிசாரணை நடைபெற்றது.
இன்று விசாரணை தொடங்கியதும் நீதிபதி பச்சாப்பூரே, இரு தரப்பு வாதம் தொடர்பாக சில விளக்கங்களை அரசு வழக்கறிஞர்ஆச்சார்யாவிடமும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதியிடமும் கேட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி கூறுகையில், இரண்டு வழக்குகளிலும் ஒருவர் மீது தான் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 2 குற்றங்களும் ஒரே சமயத்தில் தான் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே லண்டன் ஹோட்டல்வழக்கில் 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான எந்த அவசியமும் இல்லை.
தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டடனஎன்றார்.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், 2 வழக்குகளையும் தனித்தனியாகத் தான் விசாரிக்க வேண்டும்.இரண்டாவது குற்றப் பத்திரிகையின்படி லண்டனில் தினகரன் சில நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலமாக ரூ. 57 கோடிக்குஇரண்டு சொத்துக்களை (ஹோட்டல்களை) வாங்கி, அவற்றை 1998ல் ரூ. 121 கோடிக்கு விற்றுள்ளார் என்றார்.
இதையடுத்து நீதிபதி பச்சாப்பூரே, இது தொடர்பான தீர்ப்பை வருகிற 22ம் தேதி அறிவிப்பதாக கூறினார்.
இதன் பிறகு வழக்கறிஞர் ஜோதி கூறுகையில், 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது தொடர்பாக ஜெயலலிதா சென்னைஉயர்நீதிமன்றத்தில் வருகிற 13ம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications