ராமர் உருவத்துடன் ஷூ: பிரான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம்
லண்டன்:
ராமரின் உருவம் பொறித்த ஷூக்களை தயாரித்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் நிறுவனத்தைக் கண்டித்து லண்டனில் உள்ளபிரான்ஸ் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள இந்துக்கள் முடிவு செய்துள்ளனர்.
பிரான்ஸை சேர்ந்த மினெல்லி என்ற ஷூ தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ராமர் உருவம் பொறித்த ஷூக்களை தயாரித்துஇங்கிலாந்தில் விற்பனைக்கு விட்டது. இதற்கு இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனடியாக ராமர் உருவம் பொறித்த ஷூக்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்திலுள்ள இந்து அமைப்புகோரிக்கை விடுத்தது. ஆனால் இதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து வருகிற 12ம் தேதி லண்டனிலுள்ள பிரான்ஸ் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்பு முடிவுசெய்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ரமேஷ் கூறுகையில், இந்து மதம் மிகவும் சகிப்புத் தன்மைகொண்ட மதமாகும்.
எங்களது கடவுள்களின் உருவங்களை நல்ல காரியத்திற்கு பயன்படுத்தினால் நாங்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டோம்.ஆனால் காலில் போடும் ஷூக்களில் இந்துக் கடவுளின் உருவம் பொறிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது.
உடனடியாக இதை வாபஸ் வாங்குமாறு நாங்கள் கூறியும் அந்த நிறுவனத்தினர் கேட்கவில்லை. எனவே இதைக் கண்டித்து வருகிற12ம் தேதி பிரான்ஸ் தூதரகம் முன் ஆர்ப்பாட்டமும், பிரார்த்தனைக் கூட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதற்கு இந்திய அரசும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய அரசு பிரான்ஸிடமிருந்து மிராஜ் விமானங்களைவாங்குவதை நிறுத்த வேண்டும். மனித உரிமைகளை மீறியுள்ள பிரான்ஸ் நாட்டில் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைநடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பிரான்ஸ் தயாரிப்புப் பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications