ராமர் உருவத்துடன் ஷூ: வாபஸ் பெற்றது பிரான்ஸ் நிறுவனம்
லண்டன்:
இந்துக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ராமர் உருவத்துடன் கூடிய ஷூக்களை பிரான்ஸ் நிறுவனம் வாபஸ் பெற்றது.
பிரான்ஸை சேர்ந்த மினெல்லி என்ற ஷூ தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ராமர் உருவம் பொறித்த ஷூக்களை தயாரித்துஇங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனைக்கு விட்டது. இதற்கு இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமர் உருவம் பொறித்த ஷூக்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்திலுள்ள இந்து அமைப்பு கோரிக்கைவிடுத்தது. ஆனால் இதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து லண்டனிலுள்ள பிரான்ஸ் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்பு முடிவு செய்தது. உலகம்முழுவதும் உள்ள இந்துக்கள் பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று லண்டன் இந்து அமைப்புவேண்டுகோள் விடுத்தது.
பிரான்சில் வசிக்கும் இந்துக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முதலில் இந்த எதிர்ப்பு குறித்து பிரான்ஸ்நிறுவனம் கவலைப்படவில்லை.
ஆனால் நாளுக்கு நாள் பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியில்லாமல் ராமர் உருவம் பொறித்த ஷூக்களைபிரான்ஸ் நிறுவனம் வாபஸ் பெறத் தொடங்கி விட்டது. இந்த ஷூக்களை தயாரிப்பதையும் அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.கடைகளில் இருக்கும் ஸ்டாக்குகளையும் திருப்பி அனுப்பும்படி அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications