பொறியியல் கவுன்சிலிங்: 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை:
பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும், நுழைவுத் தேர்வு முறை ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தரப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங்கிற்கு ஏற்கனவேவிண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் வருகிற 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழக தேர்வு மையத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வருகிற 23ம் தேதிக்குள் வந்துசேர வேண்டும்.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு மதிப்பெண்களுடன் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இருப்பினும், பிளஸ் டூ தேர்வில் முதன்முதலில் பெற்ற மதிப் பெண்களை தவறாமல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 500 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இது ரூ 250 ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஜூலை 2வது வாரத்தில் கவுன்சிலிங் தொடங்கலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு திங்கள்கிழமைவெளியாகிறது.












Click it and Unblock the Notifications