ஆதியின் மனைவி தலைமறைவு?
சென்னை:
ஆதிகேசவனின் மனைவி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆதி கேசவன், அவரது மகன் சாரதி, வலது கரமாக திகழ்ந்த ஜெயவீரன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ஆதி கேசவன் கொடுத்த தகவல்களை வைத்து பல்வேறு விவரங்களைத் திரட்டிய போலீஸார் தற்போது சாரதி, ஜெயவீரன் ஆகியோர் மூலம் கிடைத்த தகவல்களைவைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து மும்பைக்கு விரைந்த போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது, ஆதி கேசவனுக்கும் அந்த ஹோட்டலுக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிய வந்தது.இதனால் போலீஸார் கடுப்படைந்துள்ளனர்.
இதற்கிடையே மும்பையைச் சேர்ந்த கண்டேல்வால் என்பவர் மூலம் ஆதியிடம் ஏமாந்த 3 பேர் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மும்பை சென்ற தனிப்படைபோலீஸாரிடம் 3 பேரும் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் மோசடி மும்பையில் நடந்திருப்பதால் அங்குள்ள போலீஸாரிடம் புகார் கொடுக்குமாறு தமிழக போலீஸார் அவர்களை அறிவுறுத்தினர்.
இந் நிலையில், ஆதி கேசவன் கடன் மூலம் வாங்கிய 3 கார்களை கடன் தொகையை கட்டாததால் தங்களிடம் கொடுக்குமாறு கோரி கடனுதவி அளித்த நிதிநிறுவனங்கள் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுவிற்கு போலீஸார் அளித்த பதிலில், மோசடிப் பணத்தில் தான் இந்தக் கார்களை ஆதி கேசவன் வாங்கியுள்ளார். கடன் தொகையில் முக்கால்வாசியை அவர்கட்டி விட்டார். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு கார்களை நிதி நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு மீது இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
ஆதியின் மனைவி தலைமறைவு?
இதற்கிடையே ஆதியின் மோசடிகள், மோசடி மூலம் குவித்த சொத்துக்கள், யார் யாருக்கு எவ்வளவு பணப்பட்டுவாடா செய்தார் என்பது குறித்த விவரங்களை அறிந்தஅவரது மனைவியிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீஸார் முடிவு செய்தனர்.
இதன்படி ஆதியின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரைதேடிக் கண்டுபிடித்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications