போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 18 பெண்கள் கைது
சென்னை:
போலி ஆவணங்களுடன் சென்னையில் இருந்து குவைத்துக்கு செல்ல முயன்ற ஆந்திராவை மற்றும் கேரளாவை சேர்ந்த 18 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில், குவைத் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக கும்பலாக பெண்கள் வந்தனர். அவர்களின் ஆவணங்களைகுடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்தக் கும்பலில் மொத்தம் 18 பெண்கள் இருந்தனர். இவர்களில் ஒருவர் மட்டும் கேரளாவை சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர்கள்அனைவரும் குவைத்தில் வீட்டு வேலைக்கு செல்வதாக கூறினர்.
18 பேரையும் விமான நிலைய போலீஸாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இவர்களை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா வந்த 100 பேர் கைது:
அரபு நாடுகளில் போலி இந்திய பாஸ்போர்ட்டுகள் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இந்த போலி பாஸ்போர்ட்டுகளுடன் ஏராளமானோர் அரபு நாடுகளில்ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந் நிலையில், கேரளாவிலிருந்து சார்ஜாவுக்கு வேலை தேடிச்சென்ற 100க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் கேரளா திரும்பினார்கள். அவர்களின் பாஸ்போர்ட்டுகளைசோதனை செய்த போது அவற்றில் பெரும்பாலானவை போலி எனத் தெரியவந்தது.
இதன் பேரில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 77 பேரும், கோழிக்கோடு விமான நிலையத்தில் 33 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது கூறுகையில், வெளியுறவுத் துறை இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும். இது போன்றமோசடிகளை தடுக்க இரு நாடுகளும் இணைந்து முயற்சிகள் எடுக்கும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications