காதலை மறுத்த பெண்ணுக்கு சிகரெட் சூடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு சிகரெட்டால் சூடு வைத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஷர்மிளாவை ஒரு இடத்தில் வைத்து மடக்கிய ரவிக்குமார், தனது காதலை ஏற்குமாறுகூறியுள்ளார். ஆனால் ஷர்மிளா மறுத்துள்ளார். இதனால் கடுப்பாகிப் போன ரவிக்குமார், சட்டைப் பையில் வைத்திருந்தசிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, அதனால் ஷர்மிளாவின் உடலில் சூடு போட்டுள்ளார்.
காயம் பட்டு அலறிய ஷர்மிளாவை அக்கம் பக்கத்தில் உள்ளோர் விரைந்து சென்று காப்பாற்றினர்.
இதுகுறித்து ஓட்டேரி போலீஸில் ஷர்மிளாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் காதல் சூடு போட்ட ரவிக்குமாரைபோலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications