மதுரை விமான நிலைய விரிவாக்க பணி தீவிரம்: விரைவில் மலேசியாவுக்கு நேரடி விமானம்
சென்னை:
மதுரை விமான நிலையத்தில் 4 ஏர் பஸ் விமானங்கள் நிற்பதற்கு வசதியாக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று இந்திய விமான நிலையங்களின்ஆணைய தென்மண்டல நிர்வாக இயக்குனர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தென் மண்டலத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் ரூ.300 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள்நடைபெற்று வருகின்றன. பெங்களூர் விமான நிலையத்தில் பெருகி வரும் பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு கூடுதல் கவுண்டர்கள் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இப்பணிகள் முடிவடையும். ஒரேநேரத்தில் நான்கு ஏர் பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு விமான நிலையத்தில் இடவசதி செய்து தரும் பணிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.
அவசர கால பயன்பாட்டிற்காக தீ அணைப்பு நிலையமும், வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கைக்கான அமைப்பும் இங்கு அமைக்கப்படுகிறது. மேலும் மதுரை விமானநிலையத்தில் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக நவீன முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இங்கு புதிய டெர்மினல்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.
திருச்சி விமான நிலையத்திலும் ஓடுபாதை நீளம் அதிகரிப்பு, "ஏப்ரான் விரிவாக்கம், புதிய டெர்மினல்கள், கார்கோ வசதி உள்ளிட்ட பல மேம்பாட்டு பணிகள்நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் சில இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ராமலிங்கம்.
மலேசியாவிற்கு நேரடி சர்வீஸ்:
தற்போது சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்கள் சர்வதேச விமானங்கள் வந்து போக வசதியற்றவைகளாக இருப்பதால் மலேசியாஉள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு செல்ல விரும்பும் பயணிகள் சென்னைக்கு வர வேண்டியுள்ளது.
இந் நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சர்வீஸ்களைஇயக்க அனுமதி கோரியுள்ளன. மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் நடந்து வரும் விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது இந்த திட்டம் சாத்தியமாகும்என்று கூறப்படுகிறது.
நேரம் மாற்றம்:
மதுரை, திருச்சி விமான நிலையங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் விமானங்களின் நேரம்மாற்றப்பட்டுள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications