ஜெ. நாளை ஆண்டிப்பட்டி பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை ஆண்டிப்பட்டி செல்கிறார். இதையொட்டி அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி. திரிபாதிதலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆண்டிப்பட்டி செல்கிறார்.
ஜெயலிதாவின் வருகையையொட்டி ஆண்டிப்பட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தோரணங்களும், வரவேற்பு வளைவுகளுமாக அமர்க்களப்பட்டு வருகிறது.ஜெயலிதாவை வரவேற்க அதிமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தென் மண்டல ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி. ரவி ஆகியோரின் மேற்பார்வையில் எஸ்.பிக்கள் தினகரன்,வரதராஜன், கந்தசாமி, ராஜேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் 7 கூடுதல் எஸ்.பிக்கள், 11 டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டி.ஐ.ஜி. ரவி கூறுகையில், விழா நடைபெறும் நேரத்தில் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். மதுரை-தேனி பஸ்கள் வைகை அணை வழியாக செல்லும்.விழாவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications