விஜயகாந்தின் கட்சியில் வீரப்பனின் மனைவி?
சென்னை:
நடிகர் விஜயகாந்த் தொடங்கவுள்ள கட்சியில் சேர சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அவரது ரசிகர்கள் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்தவர்கள், ஊரில் முக்கியமானவர்கள் மற்றும்பிரபலமானவர்களை என பலரையும் சந்தித்து விஜயகாந்த் ரசிகர்கள் புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இதே போல சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியையும் விஜயகாந்த் ரசிகர்கள் சந்தித்து தங்களது கட்சியில் சேருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது விஜய்காந்துக்கு தெரிந்து நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், கட்சியில் சேர முத்துலட்சுமி முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முத்துலட்சுமி கூறுகையில், இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள், சாதிக் கட்சித் தலைவர்களை விட விஜயகாந்த் எவ்வளவோ நல்லவர். ஏழைகளுக்கும் ஏராளமானஉதவிகளை செய்கிறார். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறார்.
இதனால் அவர் தொடங்கவுள்ள கட்சியில் சேருவது பற்றி நான் தீவிரமாக யோசனை செய்து வருகிறேன். ஆண்டவன் சித்தமும், மக்களோட ஆதரவும் இருந்தால் நடக்கவேண்டியது நல்லபடியாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
விஜய்காந்தின் மதுரை அரசியல் கட்சி தொடக்க மாநாட்டிலேயே முத்துலட்சுமியின் அரசியல் பிரவேசமும் இருக்கும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications