பெட்ரோல் ரூ.2.50, டீஸல் ரூ.2 விலை உயர்வு
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, பெட்ரோலுக்கு ரூ.2.50ம், டீஸலுக்கு ரூ.2ம் விலைஉயர்த்தப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் விலையை உயர்த்த இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விலை உயர்வு பற்றி எந்த முடிவும்எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டி கூட்டம் இன்று கூடியது. இக்கூட்டத்திற்கு பிரதமர்மன்மோகன் சிங் தலைமை வகித்தார். இந்தக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 2.50ம், டீசலுக்கு ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது. மண்ணெண்ணை மற்றும் எரிவாயு விலைஉயர்த்தப்படவில்லை.
இந்த தகவலை தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இடது முன்னணி போராட்டம்:
இதற்கிடையே பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக இடது முன்னணி அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீஸல் விலை உயர்வு தேவையில்லாதஒன்று. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
சாதாரண மக்களை இந்த விலை உயர்வு கடுமையாக பாதிக்கும். எனவே இதைக் கண்டித்து அடுத்த வாரம் இடது முன்னணிசார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்றார்.
இந்த விலை உயர்வால் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.72 உயரும். பழைய விலை லிட்டருக்கு ரூ.41.25 ஆகஇருந்தது. தற்போது இது ரூ 43.97ஆக உயர்ந்துள்ளது. இதே போல டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.22 உயர்ந்துள்ளது. இதன்பழைய விலை ரூ.29.30 ஆகும். தற்போதைய விலை ரூ.31.52 ஆகும். இநதக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications