நாளை கண்டதேவி கோவில் தேரோட்டம்: 2,500 போலீஸார் குவிப்பு
தேவகோட்டை:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கண்டதேவி கோவில் தேரோட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் 2 பிரிவினரிடையே மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல்பேச்சு வார்த்தை நடத்தினார். இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் கூறுகையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் சுமார் 2,500 போலீஸார்ஈடுபடுத்தப்படுவார்கள். கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே இன்று உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கின் போது ஆஜரான தலைமை வழக்கறிஞர்என்.ஆர்.சந்திரனிடம், கண்டதேவி கோவில் தேரோட்ட விழாவில் தலித் சமுதாயத்தினரும் பங்கேற்கசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி கட்ஜூ கேட்டார்.
அதற்கு என்.ஆர்.சந்திரன், தலித் சமுதாயத்தினர் உள்பட இந்து மதத்தின் அனைத்துத் தரப்பினரும் தேரோட்டவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications