சேது சமுத்திரத் திட்டம்: இளைஞர்களை ஏமாற்றும் கும்பல்
ராமேஸ்வரம்:
சேது சமுத்திரத் திட்டத்தைப் பயன்படுத்தி, வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றும் கும்பல்கள் ராமேஸ்வரம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் முளைக்கத் தொடங்கியுள்ளன.
சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏராளமான வேலை வாய்ப்புகள் ஏற்படவுள்ளன. அதற்கான விண்ணப்பங்களைஇப்போதே அனுப்பலாம் என்று கூறி இந்த கும்பல்கள் காசு பார்க்கத் தொடங்கியுள்ளன.
ராமேஸ்வரத்தில் ஒரு கும்பல் இதற்காக அலுவலகமே திறந்து வைத்து விண்ணப்பங்களை வினியோகித்துவருகிறது.
இந்த விண்ணப்பங்களை யார் வழங்கியது, எந்த அரசுத் துறையிடம் இவற்றைக் கொடுக்க வேண்டும் என்பதுதெளிவாக குறிப்பிடப்படாமல், ரூ. 150 முதல் 250 ரூபாய் வரை விலை வைத்து விண்ணப்பங்கள் விற்கப்பட்டுவருகின்றன.
ஏராளமான இளைஞர்கள் இவற்றை ஆவலுடன் வாங்கிச் செல்கிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் இந்த விற்பனைக்குப் பின்னணியில் உள்ளனர். இதில் கட்சிபேதமே இல்லை.
இந்த விண்ணப்பங்கள் வியாபாரத்தில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது திமுகவினர் தான் என்கின்றனர் இப்பகுதியினர்.
விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இதுதொடர்பான அறிவிப்பு வரும்போதுகொடுங்கள் என்று கூறி இவற்றை விற்பனை செய்கிறது இந்தக் கும்பல்.
இதேபோன்ற கும்பல்கள் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுகின்றன. பரமக்குடி,ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலும் இதுபோன்ற விற்பனை சூடு பிடித்துள்ளதாம்.
இதுகுறித்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பின் தலைவர் என்.ஜே. போஸ் கூறுகையில்,
அப்பாவி மீனவர்களின் பணத்தையும், உழைப்பையும் இந்த கும்பல்கள் சுரண்டி வருகின்றன. மீனவர்களுக்கும்,படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கும் தவறான உறுதிமொழியை இவர்கள் தருகிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏராளமான வேலை வாய்ப்புகள் வரப் போகின்றன. உங்களுக்கு நிச்சயம் வேலைஉண்டு, அதற்கு நாங்கள் பொறுப்பு என்று கூறி இந்த பண வசூலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் யார், எந்த அடிப்படையில் இந்த உத்தரவாதத்தைக் கூறுகிறார்கள் என்று புரியவே இல்லை என்றார்.
காவல்துறை தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, பண வசூல் தொடர்பாக இதுவரை புகார் ஏதும் வரவில்லை என்றுமிகப் பொறுப்பான பதில் தந்தனர். மோசடி நடந்து முடிந்து, கும்பல்கள் தப்பியோடும் வரை காத்திருப்பார்கள்போலிருக்கிறது.
ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் விசாரித்தபோது, மாநில அரசு இந்த விஷயத்தில் எதையும் செய்ய முடியாது.மத்திய அரசின் பெயரைக் கூறித்தான் இதுபோன்ற வசூல் நடப்பதாகத் தெரிகிறது.
எனவே மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைதான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும்யாராவது புகார் கொடுத்தால் அதுகுறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏமாறுவது கண் முன்னே தெரிகிறது. இதை மத்திய அரசோ, மாநில அரசோ உடனடியாகத்தலையிட்டு தடுப்பது உத்தமம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications