மலைப்பாறையில் முட்டிய மாடுகள்: கருணாநிதி வர்ணனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனக்கும், ராமதாஸுக்கும் இடையே மொழிப் பிரச்சினையை வைத்து எதுவும் மூட்டி விடலாம் என்றுநினைப்போர், மலைப்பாறையில் முட்டிய மாடுகளின் கொம்புகளாகத் தான் முறிந்து போவார்கள் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாமக- திமுக இடையே மோதல் என்று செய்திகள் வெளியாவது தொடர்பாக, முரசொலியில், தானே கேள்வி கேட்டு அதற்குகருணாநிதியே கொடுத்துள்ள பதில் வருமாறு:

நான் வேறு, திமுக என்பது வேறா? இன்றல்ல, மருத்துவர் அய்யா ராமதாஸ் கருத்தை 22.3.2005 அன்றுபூந்தமல்லியில் அவருக்கு நடத்தப்பட்ட தமிழ் பாதுகாப்பு பயண வழியனுப்பு விழாவில் தெளிவாகவே நான்எடுத்துக் கூறியிருக்கிறேன். அந்த உரையின் இறுதிப் பகுதி வருமாறு:

இன்றைக்குப் பயணத்தை மேற்கொள்கின்ற அய்யா ராமதாஸ் வெற்றிகரமாக இந்த பயணத்தை நடத்துவார்கள்என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. மூன்றாவது மொழிப் போர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையில் இது மூன்றாவது மொழிப் போர் என்று தலைப்பு போட்டிருக்கிறீர்கள் என்று நான் நம்முடையகோ.க.மணி (ஜி.கே.மணி) அவர்களைக் கேட்டேன்.

பெரியார் தலைமையில் நடந்த மொழிப்போர், பின்னர் அண்ணாவும், நீங்களும் 1965ல் நடத்திய மொழிப் போர்,இப்போது நாம் தொடங்கியிருக்கிற மொழிப்போர் மூன்றாவது மொழிப் போர் என்று சொன்னார்கள். அப்படியும்எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டைத் தவிர வேறு மொழி வந்தால் அதோடு போர் என்ற மூன்றாவது மொழியோடுநடத்தும் போர் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலம் உலகத் தொடர்புக்காக, தமிழ் நமக்காக. மூன்றாவது மொழி ஒன்று இங்கே ஆதிக்கம் செலுத்திடக்கூடாது. அதை எதிர்த்து போர் என்று குறிப்பிட்டு இந்தப் போரில் தளகர்த்தர்களாக இருக்கின்ற அனைவரையும்நான் பாராட்டி, வாழ்த்தி குறிப்பாகவும், சிறப்பாகவும்

அய்யா ராமதாஸ் அவர்களே உங்கள் தமிழ்ப் பாதுகாப்புப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும் என்று வாழ்த்தி,அமையும் என்ற நம்பிக்கையோடு வழியனுப்பி வைக்கின்றேன். இது தான் நான் அன்று பேசியது.

இதற்கு மேலும் மொழிப் பிரச்சினையில் எங்களுக்கிடையே எதுவும் மூட்டி விடலாம் என்று எண்ணுவோர்,மலைப்பாறையில் முட்டிய மாடுகளின் கொம்புகளாகத் தான் முறிந்து போவார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+