நாளை முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை:
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் நாளை (புதன்கிழமை)முதல் விநியோகிக்கப்படுகின்றன.
இந் நிலையில், இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 22ம் தேதி (புதன்கிழமை)முதல் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
ஜூலை 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 1ம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
பொதுப் பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும். மற்ற பிரிவினருக்கு ரூ. 100 ஆகும்.
விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட 13 கல்லூரிகளிலும் நேரில் பெறலாம். அல்லது செயலாளர், தேர்வுக்குழு, எண் 162, பெரியார் ஈ.வே.ரா சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10 என்ற முகவரிக்கு வரைவுக்காசோலையை அனுப்பியும் பெறலாம்.
அல்லது www.tnhealth.org என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பெறலாம் என்று தமிழகஅரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
