திருட்டுப் போலீஸாரின் கொள்ளைகள்: வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை "திருட்டுப் போலீஸார்’ தொடர்பான கொள்ளை வழக்கு, சென்னை மத்திய குற்றப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனைப் பகுதியில் மதுரையைச் சேர்ந்த நகைக் கடை ஊழியர்களிடம் மதுரை போலீஸ்காரர்களானமீனாட்சி சுந்தரம், பாஸ்கர், பன்னீர் செல்வம் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய கும்பல் ரூ. 4 லட்சம் பணத்தைகொள்ளையடிக்க முயன்ற போது பிடிபட்டது.

இவர்களில் மீனாட்சி சுந்தரம் மதுரை எஸ்.பி.சி.ஐடி போலீஸிலும், பாஸ்கர் மதுரை திருநகர் காவல் நிலையத்திலும் ,பன்னீர் செல்வம் திருமங்கலம் காவல் நிலையத்திலும் பணியாற்றி வந்தவர்கள். இந்த கொள்ளைக் கும்பல் ஜூன்8ம் தேதி கைது செய்யப்பட்டது.

இவர்கள் மீதான வழக்கை யானை கவுணி போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களாகஇருப்பதால் இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் நடராஜ்தெரிவித்துள்ளார்.

கொள்ளைக் கும்பலின் தலைவன்:

இதற்கிடையே மீனாட்சி சுந்தரத்தை சென்னை யானை கவுணி போலீஸார் 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதில்பல்வேறு தகவல்களை மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். கொள்ளைக் கும்பலுக்கு தான் தான் தலைவன் என்றும், தனதுதிட்டப்படி தான் இந்தக் கொள்ளை நடந்ததாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இருப்பினும், தான் வேறு எந்தக் கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்றும் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளதாகதெரிகிறது. மேலும், கோவை நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது கூட்டாளியான போலீஸ்காரர் பாஸ்கராக இருக்கலாம்,தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

மேலும், திருமங்கலம் அருகே உள்ள கிஷ்கிந்தா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாங்கப்பட்டுள்ள நிலங்கள், வீடுகள்குறித்து போலீஸார் கேட்டபோது, தனது சகோதரர்கள் முருகேசன், மனோகர் ஆகியோர் ஹோட்டல் பிசினஸில் ஈடுபட்டுவருவதாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் இந்த நிலங்கள், வீடுகள் வாங்கப்பட்டதாக மீனாட்சி சுந்தரம்தெரிவித்தார்.

மீனாட்சி சுந்தரத்தின் மனைவி இந்திராணி பெங்களூரைச் சேர்ந்தவர். தற்போது அவர் ஈரோடு மாவட்டம் சென்னி மலையில்வேலை பார்த்து வருகிறார். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மனைவி பெயரில் மீனாட்சி சுந்தரம் ஈரோடு, பெங்களூரில் நிலம், வீடு வாங்கியுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணைநடத்தி வருகிறார்கள். இதற்காக விரைவில் பெங்களூருக்கு போலீஸ் படை செல்லவுள்ளது.

மீனாட்சி சுந்தரத்தின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். இதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+