விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்: பல கவர்னர்களுக்கும் கல்தா
டெல்லி:
மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்படுகிறது. ஜி.கே. வாசன், பாண்டிச்சேரியைச்சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி எம்பி பேராசிரியர் ராமதாஸ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
அதே போல 12 மாநில கவர்னர்களையும் மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திலோ அமைச்சரவை மாற்றம்குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனும் சேர்க்கப்படுகிறார்.
அதேபோல, புதுவையைச் சேர்ந்த பாமக எம்.பி. ராமதாஸும் மத்திய அமைச்சராகிறார். பாமகவுக்கு ஏற்கனவே 2 அமைச்சர்கள்உள்ளனர் (டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு,). இந் நிலையில் 3வதாக ஒரு அமைச்சரை பாமக பெறவுள்ளது.
புதிய அமைச்சரவைக்கு ராகுல் காந்தி, மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் போன்ற இளம் ரத்தத்தைபாய்ச்சவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்கள் தவிர கேரளாவிலிருந்து முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி அல்லது வயலார் ரவி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்அம்பிகா சோனி, செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன், பவன் குமார் பன்சால்,சந்திரசேகர் சாஹு உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
கவர்னர்கள் மாற்றம்:
அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு மாநில கவர்னர்களும் மாற்றப்படுகின்றனர். 12 மாநில கவர்னர்கள் மாற்றப்படுவார்கள் என்றுதெரிகிறது.
பதவி விலகும் மத்திய அமைச்சர்களில் சிலர், கவர்னர்களாக நியமிக்கப்படலாம் கூறப்படுகிறது. மேலும் 5 ஆண்டுகள் கவர்னர்பதவி வகித்தவர்களும் மாற்றப்படுவர் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications