‘மெட்டி ஒலி‘ கிளைமேக்ஸ் பார்க்க முடியாததால் பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ருச்சி:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘மெட்டி ஒலி‘மெகா தொடரின் இறுதிக்கட்ட காட்சியை பார்க்க முடியாதசோகத்தில் திருச்சியில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ன் டிவியில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தினமும் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி தொடரைபெரும்பான்மையோர் விரும்பி பார்த்து வந்தனர்.

இந் நிலையில் இந்த தொடர் இறுதிக் கட்டத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் சமீபத்தில் மெட்டிஒலி தொடரின் வெற்றி விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, சன் டிவி நிர்வாக இயக்குனர்கலாநிதி மாறன், கவிஞர் வைரமுத்து, நடிகை மனோரமா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவரது பேத்தி ஷமீம் பானு. 18 வயதான ஷமீம் பானு, சன்டிவியில் தினந்தோறும் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி தொடரை தவறாமல் பார்த்து வந்தார். இவர், பக்கத்துவீட்டிற்கு சென்று டிவி பார்ப்பது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இந்தத் தொடரின் இறுதிக் காட்சி ஒளிபரப்பானது. அன்று வெற்றி விழா நிகழ்ச்சிகளுடன்சேர்த்து 5 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஷமீம் பானுவும் வழக்கம் போல பக்கத்து வீட்டுக்கு சென்று மெட்டி ஒலி தொடரைப் பார்த்துள்ளார். அப்போதுவெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்த பாட்ஷா பேத்தியைக் காணாமல் தேடியுள்ளார்.

ஆனால் அவர் டிவி தொடரைப் பார்த்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்து, வீட்டைப் போட்டு விட்டு இப்படிடிவி பார்க்கிறாயே என்று கோபத்துடன் கூறி ஷமீம் பானுவை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து தாத்தாவுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார் பானு. பின்னர் இரவு சாப்பிடாமல் தூங்கி விட்டார்.

அடுத்த நாள், காலையில் பாட்ஷா எழுந்து சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவி காய் வாங்கவெளியே போயுள்ளார். அப்போது ஷமீம் பானு, உள்ளே அறையைப் பூட்டிக் கொண்டு மண்ணெண்ணை ஊற்றிதீவைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சப்தம் கேட்டு பாட்ஷாவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கதவை உடைத்து அவரைவெளியே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் ஷமீம் பானு பரிதாபமாக இறந்து விட்டார்.

வாழ்க்கைக்கு சற்றும் பயன்படாத ஒரு டிவி தொடர், ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்தது அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+