ரேஷன் கடைகளில் காண்டம் விற்பனை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் ஆணுறைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார்.
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஆணுறைகளை ரேஷன் கடைகள்மூலம் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி கடலூர் மாவட்டத்தில் இந்த விற்பனையை மாவட்டஆட்சித் தலைவர் ககன்தீப் சிங் பேடி நேற்று தொடங்கி வைத்தார்.
ஊரகப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து கிராமப்புறமக்களிடம் எடுத்துக் கூறி ஆணுறை விற்பனையில் ஈடுபட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்முதல் கட்டமாக ஆணுறை விற்பனை ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications