தமிழக திட்டங்களுக்கு முன்னுரிமை தேவை: ஜெயலலிதா
டெல்லி:
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று டெல்லியில் துவங்கியது. தமிழக முதல்வர்ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், விவசாய உற்பத்தி குறைந்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது. நீர்வள ஆதாரதிட்டம்-2 உடனடியாக அமுல்படுத்தப்பட்டு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
நதிகள் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன்? மகாநதியை காவிரியுடன் இணைத்து பிறகு குண்டாறு நதியுடன்இணைப்பதால் இந்த தீபகற்பம் முழுவதற்குமே நல்ல பலன் தரும். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தவேண்டும்.
சீரான பொது வினியோகத் திட்டம் மூலம் பசி, பட்டினியை தடுக்க வேண்டும். பொது வினியோகத் திட்டத்தின் கீழ்விநியோகிக்கப்படும் அரிசியின் விலையை உயர்த்தக் கூடாது.
மனித வளர்ச்சித் துறையில் தமிழகம் இந்திய அளவில் சிறப்பான இடத்தில் உள்ளது. சர்வசிக்ஷா அபியான் திட்டத்தையும்சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறோம்.
டெல்லி, கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. இந்த திட்டம் சென்னையில் தயார் நிலையில்உள்ளது. அதை உடனே நிறைவேற்ற வேண்டும். சென்னை- டெல்லி, சென்னை-மும்பை சரக்கு ரயில் இணைப்பு திட்டத்தையும்உடனே செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் அமுல்படுத்த உள்ள முக்கிய திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். சென்னையில் அமையஉள்ள சர்வதேச விமான நிலையம், மதுரையில் விமானத் துறை பல்கலைக்கழகம், துத்துக்குடியில் புதிய துறைமுகம் மற்றும்சென்னை வாகன சோதனை மையம் போன்றவற்றுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு வழங்கும் கடன் விவகாரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். பின் தங்கியமாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தமிழ்நாட்டுக்கு முறையாக ஒதுக்ககப்படவில்லை. இத்திட்டத்தின் படி, தமிழ்நாட்டில் 13மாவட்டங்கள் உதவி பெற தகுதி கொண்டவை ஆகும் என்றார் ஜெயலலிதா.
இக்கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் அமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் நாராயணன், அரசு சார்புத் துறைசெயலாளர் வெங்கட்ராமன், துணைச்செயலாளர்ர ராமலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications