நுழைவுத் தேர்வு ரத்துக்கு தடை: சென்னையில் பாமக இன்று போராட்டம்
சென்னை:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளிமக்கள் கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்குசென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதிர்ச்சியைத் தருகிறது.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ச்சியில் திளைத்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் இப்போது அதிர்ச்சியில்மூழ்கியுள்ளனர். வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் சட்டத்திற்குள் நுழைந்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.
வசதியும், வாய்ப்பும் இல்லாத ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் சிலந்திக் கூட்டில் சிக்கிக் கொண்ட பூச்சிகளைப் போல்ஆதரவற்று அனாதையாக இருக்கிறார்கள். நுழைவுத் தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுகள்சட்டமாகத் தான் வந்திருக்க வேண்டும்.
ஆனால் சாதாரண ஒரு உத்தரவைப் போல அரசு இதைப் பிறப்பித்துள்ளது. இதை நான் அப்போதே சுட்டிக் காட்டி, அவசரசட்டமாக இதை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உடனடியாகசட்டசபையைக் கூட்டி அவசரச் சட்டமாக இதை பிறப்பிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதால் ஒரு பயனும் இருக்காது. ஏற்கனவே தமிழக அரசுதொடர்ந்துள்ள பல வழக்குகளில் இன்னும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி சென்னையில் பாமக மாணவர் சங்கம் சார்பில் இன்றுஆர்ப்பாட்டம் நடைபெறும். அப்போராட்டத்திற்கு நானே தலைமை தாங்குகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications