நுழைவுத் தேர்வு எழுதாமல் விண்ணப்பித்தவர்கள் கதி என்ன?
சென்னை:
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில்சேர விரும்பி விண்ணப்பித்த மாணவர்களின் நிலை குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவம் மற்றும் பொறியியல் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். தமிழக அரசு கடந்த9ம் தேதி நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகளை ரத்து செய்த பின்னர் இந்த மாணவர்கள் அனைவரும் புதிதாகவிண்ணப்பித்தவர்கள்.
இவர்கள் அனைவரும் நுழைவுத் தேர்வோ அல்லது இம்ப்ரூவ்மென்ட் தேர்வோ எழுதாதவர்கள். பிளஸ் டூ தேர்வுமதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர். தற்போதைய உயர்நீதிமன்றஉத்தரவு இவர்களுக்கு பெரும் குழப்பத்தை கொடுத்துள்ளது.
தங்களுக்காக தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா அல்லது விண்ணப்பத்திற்காக கட்டிய பணம் திருப்பிக்கொடுக்கப்படுமா என்பது குறித்துத் தெரியாமல் இம்மாணவர்கள் குழம்பியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசோ அல்லது அண்ணா பல்கலைக்கழகமோ இதுவரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.மாறாக, அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கொடுத்துவருகிறது.
மேலும், விண்ணப்பங்க்ளை வாங்க வரும் மாணவர்களிடம் ஒரு ஒப்புதலையும் கையெழுத்திட்டுப் பெறுகிறது அண்ணாபல்கலைக்கழகம். அந்த ஒப்புகை சீட்டில், நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பான தமிழக அரசின் அரசாணையை சென்னைஉயர்நீதிமன்றம் கடந்த 27.6.2005 அன்று ரத்து செய்ததை அறிவேன்.
இருப்பினும் எனது சொந்த விருப்பத்தின் பேரில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெறுகிறேன் என்று கூறி அதில்கையெழுத்திடுமாறு பல்கலைக்கழகம் கூறுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மாணவர்களிடையே மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. நுழைவுத் தர்வு அடிப்படையில் தான் மாணவர்சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தொடர்ந்து கவுன்சிலிங்கிற்கானவிண்ணப்பங்களை அண்ணா பல்கலைகழகம் வினியோகிப்பது ஏன் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கேள்விஎழுப்புகின்றனர்.
மேலும் எங்களது சுய விருப்பத்தின் பேரில் தான் விண்ணப்பம் வாங்குவதாக மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதற்கும்மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இதன் மூலம் ஒரு வேளை நுழைவுத் தேர்வை அடிப்படையாக வைத்து மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் தங்களதுவிண்ணப்பங்கள் செல்லாதவையாகி விடும், கொடுத்த பணம் திரும்ப வராது என்று மாணவர்கள் நினைக்கின்றனர்.
இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்ட அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications