அமைச்சரவையிலிருந்து திமுக, பாமக விலக திருமா. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக மற்றும் பாமக ஆகியவை வெளியேற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில்கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். மத்திய அரசை அவர் கண்டிக்காமல், விலை உயர்வுக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்.
மத்திய அரசின் போக்கைக் கண்டித்து திமுகவும், பாமகவும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் என்றார்திருமாவளவன்.












Click it and Unblock the Notifications