புதிய அரசு பொது மருத்துவமனை: ஜெ. திறந்து வைத்தார்
சென்னை:
சென்னையில் ரூ. 104 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடங்களை முதல்வர்ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிதாக தலா 7 மாடிகளைக்கொண்ட இரண்டு கட்டடங்கள் ரூ. 104 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
புதிய மருத்துவமனையில் 3600க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 16 அறுவைச் சிகிச்சை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.குளு குளு வசதி செய்யப்பட்ட 120 வார்டுகளும் உள்ளன. 18 இடங்களில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலேயேமிகப் பெரிய அரசு பொது மருத்துவமனையாக இது உருவாகியுள்ளது.
இவற்றின் திறப்பு விழா இன்று பகல் 1 மணியளவில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு புதியகட்டடங்களைத் திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கியையும் திறந்து வைத்து அவர் பேசுகையில்,பல்வேறு மருத்துவ ஜாம்பவான்கள் பணிபுரிந்த இந்த சென்னை அரசு பொது மருத்துவமனை,
புகழ் பெற்ற மருத்துவர்களை உருவாக்கிய இந்த மருத்துவமனை, தனித்திறமை வாய்ந்த மருத்துவர்கள் பணியாற்றும் இந்தமருத்துவமனை இன்று பெற்றிருக்கும் புதிய கட்டட வசதியோடும், நவீன கருவிகளின் வசதியோடும் மக்களுக்குப்பணியாற்றுவதில்,
குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதில் புதிய வரலாற்றை நிச்சயம் படைக்கும் என்றார்.
விழாவில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் நாராயணன், காதாரத் துறை செயலாளர்ஷீலாராணி ங்கத், மருத்துவ கல்வி இயக்குனர் விஜயலெட்சுமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் கலாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications