பா.விஜய்க்கு கருணாநிதி சூட்டிய பட்டம்!
சென்னை:
கவிஞர் பா.விஜய்க்கு வித்தகக் கவிஞர் என்ற பட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி சூட்டினார்.
கவிஞர் பா.விஜய் எழுதிய 12 நூல்களின் வெளியீடு சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. திமுக தலைவர்கருணாநிதி கலந்து கொண்டு இந்த நூல்களை வெளியிட்டார்.
கவிஞர் வாலி, ராமாயணக் காதையை கவிதை நடையில் சிறப்பாக எழுதியதால் அவருக்கு காவியக் கவிஞர்என்ற பட்டத்தைக் கொடுத்தேன்.
இளையராஜாவுக்கு இசை ஞானி என்ற பட்டத்தையும், வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டத்தையும் நான் தான்கொடுத்தேன். இந்தப் பட்டங்களெல்லாம் இன்னும் நீடிக்கின்றன.
இந்த வரிசையில் கவிஞர் பா.விஜய்யை சேர்க்க விரும்பினேன். அதற்காக அவருக்கு வித்தகக் கவிஞர் என்றபட்டத்தை சூட்டுகிறேன். அவர் எழுதிய 12 நூல்களையும் படித்து விட்டுத் தான் இந்த விழாவுக்கு வந்தேன்.அவரது எழுத்துக்களைப் படித்துப் பார்த்து விட்டுத் தான் இந்தப் பட்டத்தையும் சூட்டுகிறேன்.
எனக்கு கைராசி இருக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் பட்டம் வழங்குவதில் வாய் ராசி உண்டு என்றார்கருணாநிதி.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கவிஞர் வாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications