சேது: தமிழக அரசு புறக்கணித்தது வேதனை தருகிறது- ப. சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்தது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
இந்த விழாவில் தமிழக முதல்வரோ, அல்லது தமிழக அரசிசின் சார்பிலோ யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந் நிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், சேது சமுத்திரத்திட்ட தொடக்க விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது, வருத்தமளிக்கக் கூடியது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கும். இதற்காக நான்கு நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள்கோரப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications