சிபிஐ விசாரணை கோரி சதுர்வேதி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக்ஸ் சாமியார் சதுர்வேதி தன் மீதான புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.

சென்னையில் ஆசிரமம் நடத்தி வந்த சதுர்வேதி, தங்க இடம் கொடுத்த தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை கடத்திச்சென்று செக்ஸ் கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் போடப்பட்டன.குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டத்தை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, குண்டர் சட்ட வழக்கு மறு ஆய்வுக் குழு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் சதுர்வேதி மனு செய்துள்ளார்.

அதில், நான் ஒரு தவறும் செய்யவில்லை. என் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை. மாநகர காவல்துறைஆணையரும், துணை ஆணையர் போன்றவர்களும் என்னைப் பற்றித் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனதுபெயரை கெடுத்து விட்டனர்.

எந்தத் தகவலையும் சரி பார்க்காமல் என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். என்னைப் பழிவாங்கவே இந்த நடவடிக்கையில்போலீஸார் இறங்கியுள்ளனர். என் மீது முதலில் புகார் கொடுத்த தொழிலதிபர் சுரேஷ், போலீஸ் கமிஷனருக்கு தூரத்துஉறவினர். எனவே இந்த போலீஸ் விசாரணையில் எனக்கு நியாயம் கிடைக்காது.

எனவே என் மீதான அனைத்துப் புகார்களையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் சதுர்வேதி.மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி.டி.தினகரன், 3 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+