மக்கள் அமைதி காக்க பிரதமர் கோரிக்கை
டெல்லி:
மக்கள் அமைதியைக் கடைபிடிக்குமாறும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும்பிரதமர் மன்மோகன் சிங் கோரியுள்ளார். எல்லா வகையான தீவிரவாதத்தையும் மத்திய அரசு ஒடுக்கும் எனவும் என அவர்தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து தனது செய்தித் தொடர்பாளர் சஞ்சய பாரு மூலம் பிரதமர் வெளியிட்டசெய்தியில்,
இந்தத் தாக்குதல் மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது. நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் இது போன்றசெயல்களை மத்திய அரசு அடக்கி, ஒடுக்கும். அனைத்து வகையான தீவிரவாதமும் ஒடுக்கப்படும்.
இந்தத் தாக்குதலை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய இடங்கள், நினைவுச் சின்னங்களுக்குபாதுகாப்பை பலப்படுத்தவும், அமைதிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் துரதிஷ்டவசமானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலால் அந்தக் கட்டடத்துக்கு எந்தச் சேதமும்ஏற்படவில்லை.
இது போன்ற செயல்களை மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கும். நாட்டில் அமைதியை பராமரிக்கஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலை நாட்ட மாநில அரசுகள்உதவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவுடன் பிரதமர் தொலைபேசியில் ஆலோசித்தார். மாநிலத்தில்அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
லாலு கண்டனம்:
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அயோத்தியில் சர்ச்சைக்குரியஇடத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications